செய்திகள்
முஷ்பிகுர் ரஹிம்

பாகிஸ்தான் சென்று விளையாட வங்காளதேச பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம் மறுப்பு

Published On 2020-01-17 09:38 GMT   |   Update On 2020-01-17 10:31 GMT
வங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் அணி பாகிஸ்தான் சென்று மூன்று வகை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார். டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என வங்காளதேசம் கோரிக்கை விடுத்தது.

ஆனால் பாகிஸ்தான் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டது. இதனால் இரு அணிகளுக்கு இடையில் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் பாகிஸ்தானின் தொடர் முயற்சியால் வங்காளதேசம் அணி பாகிஸ்தான்  செல்ல சம்மதம் தெரிவித்தது. தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படாமல் ஒருமாத கால இடைவெளியில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் வங்காளதேச அணியின் அனுபவ மற்றும் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டார். ஏற்கனவே சாஹிப் அல் ஹசன் இல்லாத நிலையில், முஷ்பிகுர் ரஹிமின் முடிவு வங்காளதேச அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News