செய்திகள்
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.

3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட்- இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

Published On 2020-01-10 16:58 GMT   |   Update On 2020-01-10 17:39 GMT
3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இலங்கையை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.
தவான், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேரம் செல்ல செல்ல தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் நிதானமான ஆட்டத்திற்கு திரும்பினார். இருந்தாலும் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தே கொண்டே இருந்தது.

இந்தியா 4.6 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது. தவான் 34 பந்தில் அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுலும் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 97 ரன்னாக இருக்கும்போது தவான் 36 பந்தில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 36 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார்.

இதனால் இந்தியா 12 பந்தில் 25 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அணியின் ஸ்கோர் 17.3 ஓவரில் 164 ரன்களாக இருக்கும்போது விராட் கோலி 17 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என பறக்கவிட்டார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் எளிதாக 200 ரன்னை நெருங்கியது.

கடைசி ஓவரில் 19 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. 

பின்னர் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 78 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
Tags:    

Similar News