செய்திகள்
மழையால் பாகிஸ்தான் - இலங்கை டெஸ்ட் போட்டி பாதிப்பு

மூன்று நாட்களில் 92 ஓவர்களே வீசப்பட்டுள்ள நிலையில் ராவல்பிண்டி டெஸ்ட்: ரசிகர்கள் ஏமாற்றம்

Published On 2019-12-13 12:09 GMT   |   Update On 2019-12-13 12:09 GMT
பாகிஸ்தான் மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு தொடங்கிய ராவல்பிண்டி டெஸ்ட், மழைக்காரணமாக டிராவை நோக்கி செல்கிறது.
இலங்கை அணி 10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை குறுக்கீட்டால் முதல் நாளில் 68.1 ஓவர்களே வீசப்பட்டது. அப்போது இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. டி சில்வா 38 ரன்களுடனும், டிக்வெல்லா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. நேற்றும் மழை பெய்தது. இதனால் 18.2 ஓவர்கள் வீசிய நிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. டி சில்வா 72 ரன்களுடனும், பெரேரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மைதானத்தில் தேங்கி நின்றதால் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியது. ஆனால் 5.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தற்போது வரை இலங்கை 91.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கை அணியின் ஒரு இன்னிங்சே இன்னும் முடியவில்லை. இதனால் போட்டி டிராவில்தான் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். டி சில்வா 87 ரன்களுடனும், பெரேரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News