செய்திகள்
மைதானத்திற்குள் புகுந்த பாம்பு

ரஞ்சி டிராபி: மைதானத்திற்குள் பாம்பு- காலதாமதமாக தொடங்கிய ஆட்டம்

Published On 2019-12-09 15:43 IST   |   Update On 2019-12-09 15:43:00 IST
ரஞ்சி டிராபியில் ஆந்திரா - விதர்பா இடையிலான போட்டியின்போது பாம்பு மைதானத்திற்குள் புகுந்தததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியாவின் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபியின் முதல் சுற்று இன்று தொடங்கியது. விஜயவாடாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் விதர்பா - ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணி வீரர்கள் பீல்டிங் செய்ய தயாராகும்போது, திடீரென பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் மைதான ஸ்டாஃப் வந்து பாம்பை விரட்டியதும் ஆட்டம் நடைபெற்றது.

Similar News