செய்திகள்
சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க காத்திருந்த ரசிகர்கள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதல்: சேப்பாக்கத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை

Published On 2019-12-08 09:11 GMT   |   Update On 2019-12-08 09:11 GMT
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கதில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்த போட்டி வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒரு நாள் போட்டி நடைபெறுவதால் இந்த போட்டியை காணும் ஆவலில் ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கினார்கள். அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் பெற்றனர்.

இந்த ஆட்டத்துக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 ஆகும். இந்த டிக்கெட்டுகளை வாங்கவே ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். அவர்கள் பல மணிநேரம் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்.

அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.12 ஆயிரம் ஆகும். ‘ஜி’ ஸ்டாண்டின் ஹாஸ்பிட்டாலிட்டி குளிர் சாதன வசதிகொண்ட பாக்சுக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.2,400, ரூ.4000, ரூ.4,800, ரூ.6,500, ரூ.8000 ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்பனையானது. ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது.
Tags:    

Similar News