செய்திகள்
கவுதம் காம்பிர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராகிறார் கவுதம் காம்பிர்

Published On 2019-12-06 10:08 GMT   |   Update On 2019-12-06 10:08 GMT
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் 10 சதவீத பங்குகளை முன்னாள் வீரரும், எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அரசியலில் களம் இறங்கினார். டெல்லியில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியில் எம்.பி. ஆனார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராக ஜி.எம்.ஆர். குரூப், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய குரூப்புகள் உள்ளன. இரண்டும் தலா 50 சதவீதம் பங்குகள் வைத்துள்ளன. கடந்த ஆண்டு ஜிஎம்ஆர் குரூப் 50 சதவீத குரூப்பை 500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

இந்நிலையில்தான் ஜிஎம்ஆர் குரூப்பிடம் இருந்து 10 சதவீத பங்குகளை காம்பிர் வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்க இருக்கும் காம்பிர், அனுமதிக்காக காத்திருக்கிறார்.
Tags:    

Similar News