செய்திகள்
பிங்க் பால் டெஸ்ட்

இந்தியாவுடன் இரண்டு டே-நைட் டெஸ்டில் விளையாட விரும்பும் ஆஸ்திரேலியா

Published On 2019-12-06 09:44 GMT   |   Update On 2019-12-06 09:44 GMT
இந்தியாவிடம் இரண்டு டே-நைட் டெஸ்டில் விளையாட வலியுறுத்த இருக்கிறது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.
ஆஸ்திரேலியா அணி முதன்முதலாக அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்ட் போட்டியை நடத்தியது. அதில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடியது.

அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் எல்லா நாடுகளுக்கும் எதிராக டே-நைட் போட்டியை நடத்தியது. ஆனால் இந்தியா கடந்த முறை சென்றபோது விளையாட மறுத்துவிட்டது.

பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக முதல்முதலாக டே-நைட் போட்டியில் விளையாடியது.

ஒவ்வொரு தொடரிலும் இந்தியா பிங்க் பந்தில் விளையாட வேண்டும் என கங்குலி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்யும்போது இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா டே-நைட் போட்டியில் விளையாட வேண்டும் என விரும்புகிறது. இதுகுறித்து பிசிசிஐ-யிடம் வலியுறுத்த இருக்கிறது.

பிரிஸ்பேன், பெர்த் அல்லது அடிலெய்டில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடவும் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வழக்கமான டெஸ்ட் போட்டிகளை நடத்த விரும்புகிறது.
Tags:    

Similar News