செய்திகள்
முகமது அசாருதீன்

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாருதீன் ஸ்டாண்ட் திறப்பு

Published On 2019-12-06 14:01 IST   |   Update On 2019-12-06 14:01:00 IST
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் முகமது அசாருதீன் ஸ்டாண்ட் இன்று திறக்கப்பட இருக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடக்கிறது.

இப்போட்டி தொடங்குவதற்கு முன் முகமது அசாருதீன் பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்படுகிறது. ஏற்கனவே வடக்கு ஸ்டாண்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்ட நிலையில், இனிமேல் முகமது அசாருதீன் ஸ்டாண்ட் என அழைக்கப்படும்.

அதேபோல் வீரர்கள் பெவிலியன் இனிமேல் விவிஎஸ் லக்‌ஷ்மண் என அழைக்கப்படும். சுனில் கவாஸ்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்டை திறந்து வைக்கிறார்.

Similar News