செய்திகள்
ரோகித் சர்மா

சர்வதேச கிரிக்கெட்டில் 400-வது சிக்சரை அடிக்கும் ஆர்வத்தில் ரோகித் சர்மா

Published On 2019-12-06 07:53 GMT   |   Update On 2019-12-06 07:53 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியின் 400 சிக்சர்களை கடந்து சாதனைப் படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.
  • கிறிஸ் கெய்ல் 534 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்
  • ஷாகித் அப்ரிடி 476 சிக்சர்கள் விளாசியுள்ளார்
  •  எம்எஸ் டோனி 359 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள் தேர்வு அவருக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வேகப்பந்து வீரர்களான முகமது‌ ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல் சுழற்பந்து வீரர்களிலும் போட்டி நிலவுகிறது. குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவர்தான் இடம் பெறுவர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதால் அந்த அணியை வீழ்த்த கடுமையாக போராட வேண்டும். 20 ஓவர் போட்டியில் விளையாடக்கூடிய சிறந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருக்கிறார்கள்.

இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா புதிய சாதனையை படைக்க இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம்) என மொத்தம் 399 சிக்சர்களை அடித்துள்ளார். இன்னும் ஒரு சிக்சர் அடித்தால் 400-வது சிக்சரை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை பெறுவார். சர்வதேச அளவில் 400-வது சிக்சரை அடிக்கும் 3-வது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுவார்.

வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் 534 சிக்சர்கள் அடித்து முதலிடத்திலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்ரிடி 476 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகிர் சர்மா 3-வது இடத்திலும் உள்ளார்.

டோனி 359 சிக்சர்களுடன் 5-வது இடத்தில் உள்ளார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கிறார். இதனால் அவரது சிக்சர்கள் எண்ணிக்கை உயராமல் இருக்கிறது.

20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகிறார்கள்.

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்தார். தற்போது கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதால் 2-வது இடத்தில் இருந்த அவர் முதலிடத்துக்கு முன்னேறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா 93 இன்னிங்சில் 2539 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 4 சதமும், 18 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 118 ரன் குவித்துள்ளார்.

விராட்கோலி 67 இன்னிங்சில் 2450 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். இதில் 22 அரை சதம் அடங்கும். இதுவரை சதம் அடிக்கவில்லை. அதிக பட்சமாக 90 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மாவை விட கோலி 89 ரன்கள் பின்தங்கி உள்ளார்.
Tags:    

Similar News