ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் கருத்துக்களை பகிர்வேன் என கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் நாம் சேஸிங் செய்கிறோம். அதேபோல் முதலில் பேட்டிங் செய்யும்போதும் அணி செயல்பட வேண்டியது தேவை. நான் சில கருத்துக்களை வைத்துள்ளேன். அதை விராட் கோலி, ரவி சாஸ்திரி மற்றும் அணி நிர்வாகத்திடம் பகிர்வேன். நாம் அதிக அளவில் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. உலகக்கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராகவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.