செய்திகள்
விராட் கோலி, அப்துல் ரசாக், சச்சிண் தெண்டுல்கர்

விராட் கோலியை இவருடன் ஒப்பிட இயலாது: அப்துல் ரசாக்

Published On 2019-12-05 10:15 GMT   |   Update On 2019-12-05 10:15 GMT
பும்ராவை ‘பேபி பவுலர்’ என்ற அப்துல் ரசாக், விராட் கோலிக்கு சச்சின் தெண்டுல்கருக்கு சமமான இடம் கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக். இவர் அளித்த பேட்டியில் ‘‘பும்ரா பேபி பவுலர். எனது காலக்கட்டத்தில் ஜாம்பவான் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டேன். இவரது பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டிருப்பேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டு வரும் விராட் கோலியையும் சீண்டியுள்ளார்.

விராட் கோலி குறித்து அப்துல் ரசாக் கூறுகையில் ‘‘1922-ல் இருந்து 2007 வரை விளையாடிய வீரர்களிடம் நீங்கள் பேசினால், கிரிக்கெட் என்றால் என்ற என்பதை அவர்கள் கூறுவார்கள். அந்த காலக்கட்டத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வீரர்களை போன்று தற்போதுள்ளவர்களை பார்க்க முடியாது.

அப்போது உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். தற்போது அந்த அளவிற்கு நீண்ட கால உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை.



டி20 போட்டி கிரிக்கெட்டை மாற்றிவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் இல்லை. கிரிக்கெட்டில் இது தற்போது அடிப்படையாகவே ஆகிவிட்டது.

அவர்களுக்கு விராட் கோலி சிறந்த வீரர். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், சச்சின் தெண்டுல்கருக்கு நிகரான இடத்தை அவருக்கு வழங்க இயலாது. அவர் வேறு வகையைச் சார்ந்தவர்’’ என்றார்.
Tags:    

Similar News