ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முதல் 10 இடத்திற்குள் நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-க்கு மேல் இருந்தது.
இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேவேளையில் ஸ்மித் பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார்.
இருவருக்கும் இடையில் மூன்று புள்ளிகளே வித்தியாசம். 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியிலும் ஸ்மித் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
வங்காளதேச அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் 700 புள்ளிகளுடன் மயங்க் அகர்வால் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், 759 புள்ளிகளுடன் ரகானே 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.