செய்திகள்
தாவித் மலன்

நியூசிலாந்துக்கு எதிராக சதம்: தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் தாவித் மலன்

Published On 2019-11-11 11:34 GMT   |   Update On 2019-11-11 11:34 GMT
9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 51 பந்தில் 103 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் தாவித் மலன்.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கடந்த 8-ந்தேதி நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் தாவித் மலன் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் விளாசினார்.

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரரின் அதிரடி சதம் இதுவாகும். இந்த சதம் மூலம் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள்  தரவரிசையில் தாவித் மலன் 782 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 876 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆரோன் பிஞ்ச் இரண்டு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 7-வது இடத்திலும், கேஎல் ராகுல் 8-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News