செய்திகள்
லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர்

லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் வங்காளதேச அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2019-11-10 15:22 GMT   |   Update On 2019-11-10 15:22 GMT
நாக்பூரில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் வங்காளதேச அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் குருணால் பாண்டியாவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். வங்காளதேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக முகமது மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். தவான் 19 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

லோகேஷ் ராகுல் 35 பந்தில் 7 பவுண்டரியுடன் 52 எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15-வது ஓவரை அஃபிஃப் ஹொசைன் வீசினார். முதல் மூன்று பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஷ்ரேயாஸ் அய்யர்.  5-வது பந்தில் ஒரு ரன் எடுக்க 27 பந்தில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். மணிஷ் பாண்டே அதிரடி காட்ட இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்துள்ளது. மணிஷ் பாண்டே 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Tags:    

Similar News