செய்திகள்
ஜமுனா போரா, லவ்லினா போர்கோஹெய்ன்

பெண்கள் உலக குத்துச்சண்டை - ஜமுனா போரா உள்பட மேலும் 3 இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி

Published On 2019-10-11 11:17 GMT   |   Update On 2019-10-11 11:17 GMT
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தனர்.
உலன் உடே:

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த காலிறுதிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 48 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் மஞ்சு ராணி (இந்தியா) 4-1 என்ற கணக்கில் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவரும், கடந்த முறை வெண்கலப் பதக்கம் வென்றவருமான கிம் ஹயாங் மியை (தென்கொரியா) சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமட் ராக்சட்டுடன் மோதுகிறார்.

54 கிலோ உடல் எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜமுனா போரா 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் உர்சுலா கோட்லோப்பை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். ஜமுனா போரோ அடுத்து ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சீன தைபேயின் ஹூயாங் ஹியோ வென்னை சந்திக்கிறார்.

69 கிலோ உடல் எடைப்பிரிவின் காலிறுதியில் கடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் 4-1 என்ற கணக்கில் போலந்தின் கரோலினா கோஸ்ஜிஸ்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரைஇறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், சீனாவின் யாங் லியை எதிர்கொள்கிறார்.

அரைஇறுதி சுற்றைய எட்டிய மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
Tags:    

Similar News