செய்திகள்
புஜாரா

‘முதல்தர போட்டி அனுபவம் அகர்வாலுக்கு கைகொடுக்கிறது’- புஜாரா

Published On 2019-10-11 04:42 GMT   |   Update On 2019-10-11 04:42 GMT
மயங்க் அகர்வால் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். இது அவர் சர்வதேச போட்டியில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது என்று இந்திய வீரர் புஜாரா கூறினார்.
2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய வீரர் புஜாரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வால் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். இது அவர் சர்வதேச போட்டியில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது. பொதுவாக சதத்தை நெருங்கும்போது பதற்றம் வந்து விடும். ஆனால் மயங்க் அகர்வால் அந்த சமயத்தில் அச்சமின்றி விளையாடுகிறார். அரைசதத்தை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரிகிறது. அதே நேரத்தில் 100 ரன்களை கடந்ததும் அவரால் அதிவேகமாக ரன்கள் எடுக்க முடியும். அதை கடந்த டெஸ்டில் நாம் பார்த்தோம்.

டெஸ்டில் அதிக ரன்கள் குவிக்கும் பழக்கம், முதல்தர கிரிக்கெட் போட்டி அனுபவம் மூலமே கிடைக்கிறது. அதனால் அவரிடம் அது பற்றி அதிகமாக பேசவில்லை. பார்ட்னர்ஷிப்பின்போது ஆட்ட திட்டமிடல் குறித்து மட்டுமே ஆலோசித்தேன்’ என்றார்.
Tags:    

Similar News