செய்திகள்
ரோகித் சர்மா சிக்சர் விளாசிய காட்சி

முதல் டெஸ்ட்: 4-வது நாள் மதிய இடைவேளை வரை இந்திய அணி 35/1

Published On 2019-10-05 06:23 GMT   |   Update On 2019-10-05 06:23 GMT
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிராக 4-வது நாள் ஆட்டத்தில் மதிய இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
விசாகப்பட்டினம்:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் எல்கர் 160 ரன்களும் டி காக் 111 ரன்களும் கேப்டன் டுபிலிசிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். பொறுமையுடன் ஆடிய மயங்க் அகர்வால் 31 பந்துகளில் 7 ரன் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார்.

ரோகித் சர்மா அவரது பேட்டிங் ஸ்டைலில் அவ்வப்போது சிக்சர்களை பறக்கவிடுகிறார். அவர் 33 பந்துகளில் 25 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 பவுண்டரியும் 2 சிக்சர்களும் அடங்கும். புஜாரா 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

மதிய இடைவேளை வரை இந்திய அணி 106 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.
Tags:    

Similar News