செய்திகள்
விராட் கோலி ரசிகர்

தன்மீது ரசிகர் ஒருவர் கொண்டுள்ள வெறித்தனமான அன்பை கண்டு வியந்த விராட் கோலி

Published On 2019-10-02 21:26 IST   |   Update On 2019-10-02 21:26:00 IST
தனது ஜெர்சியை உடலில் பச்சைக் குத்திய ரசிகரை நேரில் அழைத்து கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விராட் கோலி.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெறித்தனமாக ரசிகரை ஒருவரை சந்தித்தார். விராட் கோலி அவரை சந்திக்க காரணம், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் அணியும் ஜெர்சியை உடல் முழுவதும் பச்சைக் குத்தியிருந்ததுதான்.



தனது மீது வெறித்தனமாக அன்பு வைத்திருக்கும் அந்த ரசிகரை நேரில் அழைத்து வாழ்த்தியதுடன், கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார் விராட் கோலி.

Similar News