செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் அமோக விற்பனை: ரசிகைகள் ஆர்வம்

Published On 2019-05-27 19:32 IST   |   Update On 2019-05-27 19:32:00 IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளதால் ஐசிசி மகிழ்ச்சியில் உள்ளது.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற வியாழக்கிழமை (மே 30-ந்தேதி) தொடங்கி, ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

‘ரவுண்ட் ராபின்’ முறை இந்த உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதால், 45 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரையிறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என 48 ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன.

இதற்கான டிக்கெட்டை ஐசிசி விற்பனை செய்து வருகிறது. ரசிகர்கள் எளிமையான வகையில் டிக்கெட்டுக்களை வாங்குவதற்கான வழிவகைகளை ஐசிசி செய்து கொடுத்துள்ளது. அதன் விளைவாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான இயக்குனர் ஸ்டீவ் எல்வோர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகைகைள் டிக்கெட்டுக்கள் வாங்கியுள்ளனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு லட்சம் பேர் 16 வயதிற்குட்பட்டோர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News