செய்திகள்

சென்னையில் நாளை மாநில கூடைப்பந்து போட்டி

Published On 2019-04-26 14:57 IST   |   Update On 2019-04-26 14:57:00 IST
சென்னையில் ரைசிங் ஸ்டார் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை நடக்கிறது. #basketball

சென்னை:

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 15-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (27-ந்தேதி) முதல் மே 5-ந்தேதி வரை நடக்கிறது. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கிறது.

ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் வங்கி, வருமானவரி, ஐ.சி.எப்., தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஆயுதப்படை அரைஸ் ஸ்டீல் உள்பட 67 அணிகள், பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் அரைஸ் ஸ்டீல், ஜேப்பியார் இன்ஸ்டிடிட், ரைசிங் ஸ்டார் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 20 அணிகள் என மொத்தம் 87 அணிகள் பங்கேற்கின்றன.

அரைஸ் ஸ்டீல் மற்றும் சத்யம் சினிமாஸ் ஆதரவுடன் நடக்கும் இப்போட்டியின் மொத்த பரிசுதொகை ரூ.2 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் போட்டி நடக்கிறது. மேற்கண்ட தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்தார். #basketball

Tags:    

Similar News