செய்திகள்

எனது விரல்கள் தயாராகவில்லை: உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து சுனில் நரைன் விளக்கம்

Published On 2019-04-25 10:24 GMT   |   Update On 2019-04-25 10:24 GMT
எனது எண்ணம் முழுவதும் உலகக்கோப்பை தொடரை சுற்றியே இருக்கும் நிலையில், விரல்கள் இன்னும் தயாராகவில்லை என்று சுனில் நரைன் விளக்கம் தெரிவித்துள்ளார். #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் நேற்று கடைசி அணியாக 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்தது. இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனுக்கு இடம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சுனில் நரைன் கூறுகையில் ‘‘நான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்பினேன். சர்வதேச கிரிக்கெட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை மிஸ் செய்கிறேன். என்னுடைய எண்ணம் எல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி,  உலகக்கோப்பையை சுற்றியே இருக்கிறது. ஆனால், என்னுடைய வீரர்கள் ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதற்கு தயாராக இருப்பதாக நான் உணரவில்லை.



டி20 உலகக்கோப்பையில் நான் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசுகிறேன். ஆனால், அது எளிதாக இல்லை. பிசியோவின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. இது என்னை சர்வதேச போட்டியில் இருந்து வெளியே தள்ளிவிட்டது.

உலகக்கோப்பைக்கான அணியில் என்னை சேர்த்துக் கொள்ளலாமா? என்று தேர்வுக்குழுவினர் ஆலோசனை நடத்தியது மிகவும் சந்தோசமாக உள்ளது. இது என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’’ என்றார்.
Tags:    

Similar News