செய்திகள்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி - இங்கிலாந்து தொடரை வெல்லுமா? இன்று கடைசி ஆட்டம்

Published On 2019-03-02 14:48 IST   |   Update On 2019-03-02 14:48:00 IST
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. #WIvENG
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. அதேபோல் வெஸ்ட்இண்டீஸ் தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். #WIvENG

Similar News