செய்திகள்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி வீழ்த்த வேண்டும்: சச்சின் கருத்து

Published On 2019-02-22 18:27 IST   |   Update On 2019-02-22 18:27:00 IST
உலகக்கோப்பையில் நாம் பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகளை கொடுப்பதை தனிப்பட்ட முறையில் வெறுக்கிறேன் என சச்சின் தெண்டுல்கர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்தையொட்டி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. பிசிசிஐ பாகிஸ்தான் அணிக்கே தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க இருக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் கொடுப்பது வெறுக்கத்தக்கதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் எப்போதுமே நாம்தான் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளோம். மீண்டும் ஒருமுறை அவர்களை வீழ்த்த வேண்டும். பாகிஸ்தானை எதிர்த்து விளையாடாமல் அவர்களுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கி உதவி செய்வதை நான் வெறுக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் இந்தியாதான் எனக்கு முதன்மையானது. ஆகவே, என்னுடைய நாடு என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்பின்னால் நான் இருப்பேன்’’ என்றார்.
Tags:    

Similar News