செய்திகள்

ஆப்கானிஸ்தான் இளம் வீரர் முஜீப் உர் ரஹ்மான் கவுன்ட்டி அணியுடன் ஒப்பந்தம்

Published On 2019-02-12 17:55 IST   |   Update On 2019-02-12 17:55:00 IST
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் கவுன்ட்டி அணியான மிடில்செக்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான். 17 வயதே ஆன இவர், தனது மாயாஜால பந்து வீச்சால் டி20 போட்டியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார்.

இதனால் ஐபிஎல், பிக் பாஷ் தொடரில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் டி20 பிளாஸ்ட் தொடரில் விளையாட கவுன்ட்டி அணியான மிடில்செக்ஸ் இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

16 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான முஜீப் உர் ரஹ்மான் 54 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
Tags:    

Similar News