செய்திகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ராஜினாமா

Published On 2019-02-07 15:12 IST   |   Update On 2019-02-07 15:12:00 IST
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #CricketAustralia
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தவர் டேவிட் சாகர். இவர் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அந்த அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் டேவிட் சாகர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இதை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட், டிராய் கூலே-ஐ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. சாகர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான விக்டோரியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. அப்போது டிராய் கூலே பயிற்சியாளராக செயல்படுவார். கூலே இதற்கு முன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
Tags:    

Similar News