செய்திகள்

ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் ரிஷப் பந்த்

Published On 2019-01-22 09:35 GMT   |   Update On 2019-01-22 09:35 GMT
இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் #ICC #RishabhPant
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களுக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐசிசியின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய 3 விருதுகளுக்கு தேர்வாகி உள்ளார். மூன்று விருதுகளையும் வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.



2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் சதம் அடித்து அசத்தியவர் ரிஷப் பந்த். அத்துடன் ஒரு டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

21 வயதாகும் ரிஷப் பந்த் நாட்டிங்காமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன் 696 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 49.71 ஆகும். டெஸ்ட் போட்டியில் 40 கேட்ச்கள் பிடித்ததுடன், இரண்டு ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.
Tags:    

Similar News