செய்திகள்

ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் - டோனியுடன் இணைந்தார் ரிஷப் பந்த்

Published On 2018-12-08 03:37 GMT   |   Update On 2018-12-08 03:37 GMT
இந்திய வீரர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் வரிசையில் முன்னாள் கீப்பர் டோனியுடன் ரிஷப் பந்த் இணைந்துள்ளார். #AUSvIND #MSDhoni #RishabhPant
அடிலெய்டு:

இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தது.

பேட்டிங்கில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சோபிக்காத நிலையில், அதனை பந்துவீச்சாளர்கள் ஈடுசெய்தனர். இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். அதேபோல் பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நெருக்கடியான தருணங்களில் கேட்ச் பிடித்து பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.



இந்த இன்னிங்கில் கவாஜா, ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெயின், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய 6 பேரை கேட்ச் மூலம் அவுட் ஆக்கினார் ரிஷப் பந்த். இதன்மூலம் இந்திய கீப்பர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் (6) பிடித்து முதலிடத்தில் உள்ள டோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். 2009ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டோனி ஒரு இன்னிங்சில் 6 கேட்ச் பிடித்தது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #MSDhoni #RishabhPant
Tags:    

Similar News