செய்திகள்

சென்னையில், ஜனவரி 9-ந்தேதி மராத்தான் பந்தயம்- 25 ஆயிரம் பேர் பங்கேற்பு

Published On 2018-12-05 09:38 GMT   |   Update On 2018-12-05 09:38 GMT
சென்னையில் ஜனவரி 9-ந்தேதி நடக்கவுள்ள மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiMarathon
சென்னை:

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் மராத்தான் பந்தயம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 7-வது சென்னை மராத்தான் பந்தயம் ஜனவரி 6-ந்தேதி நடக்கிறது. ஸ்கெச்சர்ஸ் பெர்பாமன்ஸ் நிறுவனம் இந்த பந்தயத்துக்கு முதன்மை ஸ்பான்சராக இருக்கிறது.

முழு மராத்தான் (42.195 கிலோ மீட்டர்), அரை மராத்தான் (32.186 கிலோ மீட்டர்). 10 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது. புதிதாக பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கிலோ மீட்டர்) சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.

முழு மராத்தான் பந்தயம் பெர்பெக்ட் 20 மைலர் ஆகிய போட்டிகள் அதிகாலை 4 மணிக்கு நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. மினி மராத்தான் 4.30 மணிக்கும், 10 கிலோ ஓட்டம் 6 மணிக்கும் தொடங்குகிறது.

மராத்தான் பந்தயத்துக்கான டி‌ஷர்ட் மற்றும் பதக்கத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சென்னையில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தினார். #ChennaiMarathon
Tags:    

Similar News