செய்திகள்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதல்

Published On 2018-11-10 09:08 GMT   |   Update On 2018-11-10 09:08 GMT
10 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது. #HarmanpreetKaur #WomenWorldT20 #T20 #India

கயானா:

10 நாடுகள் பங்கேற்ற மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது.

‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி நியூசிலாந்தை 34 ரன்னில் வீழ்த்தியது.

முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்து சாதனை புரிந்தார். அவர் 51 பந்தில் 103 ரன்னும், (7 பவுண்டரி, 8 சிக்கர்) ஜெமீமா 45 பந்தில் 59 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்னே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் அதிகபட்சமாக 50 பந்தில் 67 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். பூனம்யாதவ், ஹேமலதா, தலா 3 விக்கெட்டும், ராதாயாதவ் 2 விக்கெட்டும், அருந்ததி ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. பலவீனமான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 52 ரன்னில் பாகிஸ்தானையும், வெஸ்ட் இண் டீஸ் 60 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்தையும் வீழ்த்தின.

இன்று நடைபெறும் 4-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. #HarmanpreetKaur #WomenWorldT20 #T20 #India

Tags:    

Similar News