செய்திகள்

2-வது டி20 போட்டியில் 130 ரன்கள் அடித்தாலே பெரிய விஷயம்- ஆடுகளம் பராமரிப்பாளர் எச்சரிக்கை

Published On 2018-11-05 13:06 GMT   |   Update On 2018-11-05 13:06 GMT
லக்னோவில் நடைபெற இருக்கும் 2-வது டி20 போட்டியில் 130 ரன்கள் அடித்தாலே மிகப்பெரிய விஷயம் என்று ஆடுகளம் பராமரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது.

2-வது போட்டி லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. எகனா மைதானத்தில் முதன்முறையாக சர்வதேச போட்டி நடைபெறுகிறது. பொதுவாக டி20-க்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். முதல் டி20 போட்டி என்பதால் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக ஆடுகளமாக அமைக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், முதலில் பேட்டிங் செய்த அணி 130 ரன்கள் அடித்தாலே வெற்றிக்கான ரன்னாக இருக்கும் என எகனா மைதான ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் கூறுகையில் ‘‘கட்டாயம் இது அதிக ஸ்கோர் அடிக்கும் ஆடுகளமாக இருக்காது. இருபக்கமும் வெடிப்பு காணப்பட்டு அதன்மீது நீண்ட உயிரற்ற புற்கள் காணப்படும். ஸ்லோ பவுன்ஸ் பிட்ச் ஆக இருக்கும். தொடக்கத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.

ஒடிசாவில் உள்ள போலங்கிர் இருந்து கொண்டு வந்த மண்ணால் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் ரன்கள் குவிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News