செய்திகள்

ஈடன் கார்டனில் அசாருதீனுக்கு கவுரவம்- சிஓஏ மீது கவுதம் காம்பிர் கடும் சாடல்

Published On 2018-11-05 09:44 GMT   |   Update On 2018-11-05 09:44 GMT
ஈடன் கார்டனில் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது, முன்னாள் வீர்ரகள் கவுரவிக்கப்படுவார்கள். அவர்கள் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள்.

நேற்றைய போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்தினார். அசாருதீன் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார்.

நேற்று அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக்குழு) மற்றும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தோல்வியடைந்து விட்டது. அவர் போட்டியை தொடங்கி வைத்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News