செய்திகள்

பார்வையற்றோர் டி20 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி

Published On 2018-10-17 15:06 GMT   |   Update On 2018-10-17 15:06 GMT
இலங்கைக்கு எதிரான பார்வையற்றோர் டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. #T20BlindCricket #INDvSL
புதுடெல்லி:

இலங்கை மற்றும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. அஜய் அரை சதம் அடித்தார்.

இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, விரைவிலேயே முன்னணி விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் நிதானமாக ஆடினர். இதனால் ரன்ரேட் உயரவில்லை. சிறப்பாக விளையாடிய அஜித் சில்வா அரை சதம் அடித்தார். எனினும் அந்த அணியால் 189 ரன்களே சேர்க்க முடிந்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஜய் ரெட்டி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இதனால் தொடரையும் கைப்பற்றி உள்ளது. 4-வது போட்டி லூதியானாவில வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. #T20BlindCricket #INDvSL
Tags:    

Similar News