செய்திகள்

அபு தாபி டெஸ்ட்- பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு- இரண்டு வீரர்கள் அறிமுகம்

Published On 2018-10-16 06:01 GMT   |   Update On 2018-10-16 06:01 GMT
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அபு தாபி டெஸ்டில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு வீரர்கள் அறிமுகம் ஆகிறார்கள். #PAKvAUS
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது. பாகிஸ்தான் அணி 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த நிலையில் கவாஜா, டிம் பெய்ன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா சுமார் 130 ஓவர்கள் சமாளித்து அசத்தலாக டிரா செய்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் இன்று அபு தாபியில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியின்போது காயம் அடைந்த தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பகர் சமான் டெஸ்டில் அறிமுகம் ஆகியுள்ளார்

அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ரியாஸ் வஹாப் நீக்கப்பட்டு மிர் ஹம்சா அறிமுகம் ஆகியுள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
Tags:    

Similar News