செய்திகள்

பலோன் டி’ஆர் விருது- ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் அறிவிப்பு

Published On 2018-10-09 15:18 IST   |   Update On 2018-10-09 15:18:00 IST
பலோன் டி’ஆர் விருதிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது #Ronaldo #messi
கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் மதிப்பிற்குரிய பலோன் டி’ஆர் விருது வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விருதிற்கான முதற்கட்ட வீரர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



பிரான்ஸ் கால்பந்து மெகசின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதை ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் தலா ஐந்து முறை வென்றுள்ளனர்.

ரொனால்டோ (யுவான்டஸ்)
செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி)
அலிசன் பெக்கெர் (லிவர்பூல்)
காரேத் பேலே (ரியல் மாட்ரிட்)
கரிம் பென்சிமா (ரியல் மாட்ரிட்)
எடின்சன் கவானி (பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்)
டிபாயட் கோர்ட்டாய்ஸ் (ரியல் மாட்ரிட்)
கெவின் டி ப்ரூயின் (மான்செஸ்டர் சிட்டி)
ரொபேர்ட்டோ ஃபேர்மினோ (லிவர்பூல்)
டியேகோ காடின் (அட்லெடியோ மாட்ரிட்)
Tags:    

Similar News