செய்திகள்

சர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் - டோனி புதிய சாதனை

Published On 2018-09-29 05:48 GMT   |   Update On 2018-09-29 05:48 GMT
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் 2 பேட்ஸ்மேன்களை டோனி ஸ்டம்பிக் செய்து அவுட் ஆக்கியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் செய்து புதிய சாதனையை எட்டியுள்ளார். #MSDhoni #AsiaCup2018 #INDvBAN
துபாய்:

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வங்காள தேச அணி 222 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சதம் அடித்த லிட்டோன் தாஸ் மற்றும் கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். இதன்மூலம் டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய சாதனையை எட்டினார்.



43-வது ஓவரில் மோர்தசாவை ஸ்டம்பிங் செய்ததன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தம் 800 பேட்ஸ்மேன்களை ஸ்டம்பிங் மூலம் அவுட் ஆக்கியுள்ளார். இது ஆசிய அளவில் அதிக ஸ்டம்பிங் ஆகும். சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் அதிக ஸ்டம்பிங்குடன் (998) தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 905 ஸ்டம்பிங்குடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். #MSDhoni #AsiaCup2018 #INDvBAN

Tags:    

Similar News