செய்திகள்

U-16 கால்பந்து தொடர்- 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2018-09-28 14:49 IST   |   Update On 2018-09-28 14:49:00 IST
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 16 வருடத்திற்குப் பிறகு காலிறுக்கு முன்னேறியுள்ளது. #IndiaFootBall
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடர் மலேசியால் நடைபெற்று வருகிறது. இந்தியா குரூப் ‘சி’யில் இடம்பிடித்துள்ளது. தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவை எதிர்த்து விளையாடியது.



இந்த போட்டி கோல்கள் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா குரூப் ‘சி’யில் 2-வது இடம்பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் இந்தியா தென் கொரியாவை சந்திக்க வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News