செய்திகள்

பிபா தரவரிசை- பிரான்ஸ் உடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டது பெல்ஜியம்

Published On 2018-09-20 13:51 GMT   |   Update On 2018-09-20 13:51 GMT
பிபா உலகத் தரவரிசையில் உலகக்கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் உடன் பெல்ஜியம் அணி முதல் இடத்தை பகிர்ந்து கொண்டது. #FIFA
ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் பிபா உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

கடந்த வாரம் நேஷன்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. இதில் பெல்ஜியம் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பிரான்ஸ் உடன் இணைந்து பெல்ஜியம் முதல் இடத்தை பிடித்துள்ளது.



25 வருடங்களுக்குப் பிறகு இரு அணிகள் முதல் இடத்தை பிடித்துள்ளன. முதல் 10 இடங்களை பிடித்துள்ள அணிகள் விவரம்:-

1. பிரான்ஸ், பெல்ஜியம் - 1729
3. பிரேசில் - 1663
4. குரோசியா - 1634
5. உருகுவே - 1632
6. இங்கிலாந்து 1612
7. போர்சுக்கல் - 1606
8. சுவிட்சர்லாந்து - 1598
9. ஸ்பெயின் - 1597
10. டென்மார்க் - 1581
Tags:    

Similar News