செய்திகள்

கவுன்ட்டி கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்திய முரளி விஜய்

Published On 2018-09-14 10:25 GMT   |   Update On 2018-09-14 10:25 GMT
இங்கிலாந்து தொடரில் மோசமாக விளையாடிய முரளி விஜய், கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். #MuraliVijay
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என மோசமாக இழந்தது. முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார். தொடக்க வீரரான இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அணியில் இருந்து நீக்கியதால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். அதன்படி எசக்ஸ் அணிக்காக விளையாடினார். எசக்ஸ் - நாட்டிங்காம்ஷைர் அணிகளுக்கு இடையிலான கவுன்ட்டி கிரிக்கெட் கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

இதில் நாட்டிங்காம்ஷைர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. நாட்டிங்காம்ஷைர் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய எசக்ஸ் அணி 233 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முரளி விஜய் 56 ரன்கள் அடித்தார்.



பின்னர் நாட்டிங்காம்ஷைர் 2-வது இன்னிங்சில் 337 ரன்கள் சேர்த்தது. இதனால் சசக்ஸ் அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடகக் வீரராக களம் இறங்கிய முரளி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 242 பந்தில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் வெஸ்லேயும் (110 அவுட் இல்லை) சிறப்பாக விளையாட சசக்ஸ் அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 282 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கவுன்ட்டி போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் இடம் கிடைக்கும் என முரளி விஜய் நம்பிக்கையில் உள்ளார்.
Tags:    

Similar News