செய்திகள்

கரிபியன் பிரீமியர் லீக் - ஜமைக்காவை வெளியேற்றியது செயிண்ட் கிட்ஸ் அணி

Published On 2018-09-13 20:10 GMT   |   Update On 2018-09-13 20:10 GMT
கயானாவில் நடைபெற்ற கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஜமைக்காவை வெளியேற்றியது செயிண்ட் கிட்ஸ் அணி. #CPL2018
மேற்கிந்திய தீவில் உள்ள கயானாவில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் கிறிஸ் கெயில் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலைமையிலான ஜமைக்கா தலைவாஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, ஜமைக்கா தலைவாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 63 பந்துகளில் 103 ரன்னில் அவுட்டானார். அவரை தவிர மற்ற யாரும் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், ஜமைக்கா தலைவாஸ் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயிண்ட் கிட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆண்டன் டேவ்சிச் 23 பந்தில் 50 ரன்கள் அடித்து வெளியேறினார்.

மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காவிட்டாலும் பவுண்டரிகள், சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியாக, செயிண்ட் கிட்ஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆண்டன் டேவ்சிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜமைக்கா அணி தொடரில் இருந்து வெளியேறியது. #CPL2018
Tags:    

Similar News