செய்திகள்

செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு நட்புறவு விருது - ரஷிய அரசு வழங்கியது

Published On 2018-09-10 21:25 GMT   |   Update On 2018-09-10 21:25 GMT
பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. #ViswanathanAnand #RussianFederation
சென்னை:

பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் சிறப்புமிக்க ‘நட்புறவு விருது’ வழங்கி கவுரவித்தார்.

விழாவில், ரஷிய நாட்டின் பெண் ஓவியர் கட்யா பெல்யாவ்ஸ்கயா, செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு ஒரு ஓவிய கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

‘நட்புறவு விருது’ என்பது இரு நாடுகள் இடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல், புரிதல் ஆகியவற்றுக்காக பாடுபட்ட பிரபலங்களுக்கு ரஷியா நாடு வழங்கும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.   #ViswanathanAnand #RussianFederation
Tags:    

Similar News