இந்தியா

கடும் நிதிச்சுமை: பெற்றோரை கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சகோதரர்கள்

Published On 2025-12-27 19:01 IST   |   Update On 2025-12-27 19:01:00 IST
  • தந்தை நோயால் அவதிப்பட்டு வந்ததால், மகன்கள் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
  • தந்தை, தாயை கொலை செய்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சோனாஜி லாகே (51). இவரது மனைவி ராதாபாய் லாகே (45). இவர்களுக்கு உமேஷ் (25), பஜ்ரங் (23) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

ரமேஷ் சோனாஜி லாகே பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்களது குடும்பத்தில் கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதை இரண்டு மகன்களால் சமாளிக்க முடியவில்லை.

இதனால் தந்தை மற்றும் தாயை கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தந்தை மற்றும் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அத்துடன் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையின் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. மேலும், இந்த நான்கு பேரின் மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதிச்சுமை காரணமாக பெற்றோரை கொலை செய்து, இரண்டு மகன்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News