செய்திகள்

பூம் பூம் என்ற செல்லப்பெயர் வைத்த இந்திய வீரர் - ரகசியம் உடைத்த அப்ரிடி

Published On 2018-08-29 16:01 IST   |   Update On 2018-08-29 16:01:00 IST
ரசிகர்களால் பூம் பூம் அப்ரிடி என அழைக்கப்படும் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி, தனக்கு அந்த செல்ல பெயர் வைத்த இந்தியர் யார் என்பதை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். #ShahidAfridi
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான ஷாகித் அப்ரிடி, ஒருநாள் போட்டிகளில் 351 சிக்சர்களும், டி20 போட்டிகளில் 73 சிக்சர்களும் அடித்துள்ளார். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்தார்.

அப்ரிடியின் மிகவும் பிரபலமான பூம் பூம் என்ற பட்டைப்பெயரை யார் வைத்தது? என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ரவி சாஸ்திரி என அப்ரிடி பதில் அளித்துள்ளார். எனினும், அவர் எப்போது, எதற்காக அந்த பெயரை வைத்தார் என அப்ரிடி கூறவில்லை.



ரவி சாஸ்திரி தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News