செய்திகள்

அரையிறுதியில் போராடி தோல்வி- ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றார் சாய்னா நேவால்

Published On 2018-08-27 12:11 IST   |   Update On 2018-08-27 12:11:00 IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SainaNehwal
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன தைபே வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய போட்டியில் சாய்னா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

இதையடுத்து இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் முதல் செட்டை பிவி சிந்து கைப்பற்றியிருப்பதால், போட்டியின் முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். #AsianGames2018 #SainaNehwal
Tags:    

Similar News