செய்திகள்

ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு 4வது தங்கம்- துப்பாக்கி சுடும் வீராங்கனை ராகி சர்னோபத் அபாரம்

Published On 2018-08-22 15:15 IST   |   Update On 2018-08-22 15:15:00 IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ராகி சர்னோபத், துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #AsianGames2018 #RahiSarnobat
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதற்கான தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட மனு பாக்கர் 593 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் மற்றொரு வீராங்கனை ராகி சர்னோபத் 580 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப்பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ராகி சர்னோபத் மிகச்சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 4-வது தங்கம் ஆகும். மனு பாக்கர் 6-வது இடத்திற்கு பின்தங்கியதால் பதக்க வாய்ப்பை இழந்தார்.

ராகி சர்னோபத் தங்கம் வென்றதன் மூலம் மொத்தம் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #RahiSarnobat
Tags:    

Similar News