செய்திகள்

தங்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு ரூ.50 லட்சம் பரிசு- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Published On 2018-08-21 12:52 IST   |   Update On 2018-08-21 12:52:00 IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AsianGames2018 #SaurabhChaudhary
லக்னோ:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி (வயது 16) தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் சவுரப் 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். எனவே, அவரது திறமையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AsianGames2018  #SaurabhChaudhary
Tags:    

Similar News