செய்திகள்

ஆசிய போட்டி ஹாக்கியில் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது- இந்திய அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை

Published On 2018-08-14 17:42 IST   |   Update On 2018-08-14 17:42:00 IST
ஆசிய போட்டி ஹாக்கியில் தங்கப் பதக்கம் வெல்லும் அணிகளில் இந்தியாவும் ஒன்று என கேப்டன் ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார். #AsiaGames2018
ஆசிய போட்டி ஆகஸ்ட் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா, பாலேம்பங்கில் நடக்கிறது. இதில் பிஆர் ஸ்ரீஜேஷ் தலைமையிலான் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பங்கேற்கிறது. ஆசிய போட்டியில் இந்தியா தங்கம் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் ‘‘எங்களுடைய இலக்கே, தங்கம் வென்று முன்னதாகவே டோக்கியோவில் 2020-ல் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற வேண்டும் என்பதுதான். இதைவிட வேறு ஏதும் இல்லை.



அதன்பிறகு இரண்டு வருடங்கள் ஒலிம்பிக் தொடருக்காக தயாராக  நேரம் கிடைக்கும். தற்போதுள்ள இந்திய அணியால் ஜகார்த்தாவில் தங்கம் வெல்ல முடியும். தங்கம் வெல்வதற்காக சாதகமான அணிகளில் நாங்களும் ஒன்று’’ என்றார்.
Tags:    

Similar News