செய்திகள்

டிஎன்பிஎல் 2018- மதுரை பாந்தர்ஸ்க்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காரைக்குடி காளை

Published On 2018-08-02 21:13 IST   |   Update On 2018-08-02 21:13:00 IST
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஸ்ரீகாந்த் அனிருதா ஆட்டத்தால் மதுரை பாந்த்ர்ஸ்க்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvMP
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 24-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி காரைக்குடி காளையின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதித்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 43 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.



அதன்பின் வந்த ஷாஜகான் 1 ரன்னில் வெளியேறினார். 6-வது வீரராக களம் இங்கிய ராஜ்குமார் 9 பந்தில் 20 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 பந்தில் 23 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மதுரை பாந்தர்ஸ் அணியின் கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, கவுசிக், தன்வர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News