செய்திகள்

நான்கு பதக்கம் வென்ற டெல்லி வீராங்கனைக்கு இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை

Published On 2018-07-30 11:00 GMT   |   Update On 2018-07-30 11:00 GMT
காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் நான்கு பதக்கம் வென்ற டெல்லி வீராங்கனை இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். #ManikaBatra
ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான கோல்டு கோஸ்டில் காமல்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான டென்னிஸில் டெல்லி வீராங்கனை மணிகா பத்ரா அசத்தினார். அவர் பெண்கள் அணி மற்றும் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார்.

பெரிய பெரிய தொடரில் சாதிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலங்கள் ஊக்கத்தொகை அறிவிக்கும்.

வெளிமாநிலங்கள் அதிகத் தொகை கொடுத்த போதிலும் டெல்லி அரசு தங்கத்திற்கு 14 லட்சம் ரூபாயும், வெள்ளிக்கு 10 லட்சம் ரூபாயும், வெண்கலத்திற்கு 6 லட்சம் ரூபாயும் கொடுத்து வந்தது. இது மிகவும் குறைவு என்பதால் ஊக்கத்தொகையை அதிகரித்து டெல்லி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

பரிந்துரையின்படி மணிகா பத்ராவிற்கு நான்கு பதக்கத்திற்கான தொகையாக 1.7 கோடி ரூபாய் டெல்லி அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. டெல்லியில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் பெடரேசன் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இதை மணிகா பத்ரா தெரிவித்தார்.



இதுகுறித்து மணிகா பத்ரா கூறுகையில் ‘‘இதுவரை ஏன் பணம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. ஆனால், பணம் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.

டெல்லி அரசின் கல்வித்துறைக்கான (விளையாட்டு) துணை இயக்குனர் தர்மேந்தர் சிங், மணிகா பத்ரா ஃபைல் கேபினட் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News