செய்திகள்

உலகக்கோப்பை ஹாக்கியை பிரபலப்படுத்த புதிய யுக்தியை கையாண்ட ஒடிசா மாநிலம்

Published On 2018-07-27 13:46 GMT   |   Update On 2018-07-27 13:46 GMT
ஒடிசாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரை பிரபலப்படுத்தும் வகையில் ஒடிசா அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. #HI
ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நவம்பர் மாதம் 28-ந்தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 16-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கு ஒடிசா அரசு டைட்டில் ஸ்பான்சராக உள்ளது.

உலகக்கோப்பை ஹாக்கி தொடரை பிரபலப்படுத்த ஒடிசா அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் ஹாக்கி போட்டியை பார்க்க வருவதுடன், ஒடிசாவை சுற்றிப் பார்க்கவும் வந்தால் ஒடிசா மாநில சுற்றுலாத் துறையில் முன்னேற்றம் காணமுடியும். அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று நினைக்கிறது.

இதன் முயற்சியாக வெற்றிகரகமாக கொண்டு செல்லும் வகையில் லண்டனில் பஸ்களில் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த பஸ் செல்லும் வழியெல்லாம் லண்டன் வாசிகள் மற்றும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினர் இந்த விளம்பரத்தை பார்க்க வாய்ப்புள்ளது. அப்படி பார்த்து ஒடிசாவிற்கு வந்தால் அதிக அளவில் வருமானம் ஈட்டலாம் என நினைக்கிறது.



இந்த விளம்பரத்திற்கு ‘காலையில் ஒடிசா, மாலையில் ஹாக்கி’ என்று டைட்டில் வைத்துள்ளது. தற்போது லண்டனில் பெண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதை பயன்படுத்தி ஒடிசா இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News