செய்திகள்

2வது ஒருநாள் போட்டி - வங்காளதேசம் வெற்றி பெற 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2018-07-25 22:47 GMT   |   Update On 2018-07-25 22:47 GMT
கயானாவில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹெட்மையரின் சதத்தால் வங்காளதேசம் வெற்றி பெற 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #WIvBAN #ShimronHetmyer
வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

கயானாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிம் இக்பாலின் சிறப்பான ஆட்டத்தால், வங்காள தேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், லெவிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் விரைவில் அவுட்டாகினர். 

அந்த அணியின் ஷிம்ரோன் ஹெட்மையர் மட்டும் கடைசி வரை நிலைத்து நின்று ஆடி 125 ரன்களில் அவுட்டானார். அவருக்கு ரவ்மன் பவெல் 44 ரன்கள் அடித்து ஒத்துழைப்பு கொடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்காளதேசம் சார்பில் ருபெ ஹோசைன் 3 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 2712 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி விளையாடி வருகிறது. #WIvBAN #ShimronHetmyer
Tags:    

Similar News